For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், கேரளாவில் தந்த வேட்டையாடி வந்த "யானை" மணி கைது..!

Google Oneindia Tamil News

திருப்பூர்: தமிழகத்திலும், கேரளாவிலும் யானைகளைக் கொன்று தந்தங்களை வெட்டிக் கடத்தி வந்த மணி என்பவரை தேனி மாவட்ட போலீஸார், திருப்பூரில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

இவர் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான யானை வேட்டை வழக்குகள் உள்ளன. இதுகுறித்து மதுரை சரக வனப் பாதுகாவலர் நிஹர் ரஞ்சன் கூறுகையில், மணி குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர் திருப்பூரில் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

Elephant poacher arrested in Tirupur

இதையடுத்து சிறப்புப் படை தேனியிலிருந்து கிளம்பி திருப்பூருக்குச் சென்றது. அங்கு உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் மணியை மடக்கிப் பிடித்துத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர் என்றார்.

கைது செய்யப்பட்ட மணி சின்னமனூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மணி மீது கேரளா, தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகத்திலும் வழக்குகள் உள்ளனவாம். இவர் முன்பு கேரளாவில் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் விசாரணையி்ன்போது தப்பி விட்டாராம்.

English summary
A special police team from Theni, have arrested an Elephant poacher in Tirupur. The poacher, Mani is wanted in TN, kerala and Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X