For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு!

சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Google Oneindia Tamil News

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7.30 மணி முதல் மதியம் வரை சோதனை நடைபெற்றிருந்தது.

இந்த சோதனையில் 6 அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். சோதனை நடைபெற்ற வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என கூறப்படுகிறது, அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Income tax raid at Former union minister P Chidambaram

இதேபோல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விவகாரத்தில் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்பட்டது.

இந்த ரெய்டில் எதுவும் கிடைக்கவில்லை என பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்பே இல்லாத வழக்கில் தங்கள் வீட்டில் ரெய்டு நடந்தது நகைப்புக்குரியது என்று சிதம்பரம் தெரிவித்தார்.

English summary
Enforcement officials raid at Former union minister P Chidambaram house at chennai. enforcement raids at his Chennai Nungambakkam house. Like wise raids conducts in Karthi Chidambaram's Chennai and Delhi houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X