For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று ஒரே நாளில் 56,000 பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை- ரிசல்ட் நாளான இன்று எவ்வளவோ?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று முதல் நாளில் 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

பி.இ விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் மே 29 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

Engineering admission: issuance of application forms

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விநியோக மையங்களில் முதல் நாளில் மாணவர்களும், பெற்றோரும் விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 60 மையங்களில் 56,685 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாளில் 69,925 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The distribution of application forms for the Tamil Nadu Engineering Admission (TNEA) 2015 commenced in four colleges in Salem and Namakkal districts on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X