For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ. படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு: 2,50 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. நேற்று மாலை 5 மணி வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 781 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணிப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்தாண்டு முதல் ஆன்லைனில் விண்ணபிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

Engineering studies applications forms distribution ends

பொறியியல் படிப்பில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 781 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணிப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 530 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜூன் 4-ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக, செயலருக்கு வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். 2016-17-ம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.

English summary
Engineering studies applications forms 2,52,781 students registered via online for engineering course
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X