For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைத் தமிழில் கொஞ்சி விளையாடும் ஆங்கிலம்.. தெரியுமா சேதி?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னைத் தமிழ் சிலருக்கு வினோதமாக இருக்கலாம்.. ஆனால் மிகப் பெரிய ஆய்வுக்குட்படுத்தக் கூடிய அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் அதில் பொதிந்துள்ளன என்பது சென்னைத் தமிழை நன்கு அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

சென்னைத் தமிழில் எத்தனையோ மொழிகள் அடங்கியுள்ளன. அமர்க்களமாக பொருந்திப் போயுள்ளன. அதில் ஆங்கிலமும் ஒன்று என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.

உருது, அரபி, பாரசீகம் என பல மொழிகளின் தாக்கம் சென்னைத் தமிழில் உள்ளன என்றாலும் ஆங்கிலமும் முக்கியமாக கலந்து தமிழாக மாறி தலைநகர மக்களின் பாஷையை மயக்கத்துக்குரியதாக மாற்றியுள்ளது.

ஏஞ்சல்.. அஞ்சலை

ஏஞ்சல்.. அஞ்சலை

சென்னையில் அஞ்சலை என்ற பெயர் பாப்புலர். ஆனால் இது உண்மையில் ஆங்கில வார்த்தையாகும். வேறு ஒன்றுமில்லை. ஏஞ்சல் என்ற ஆங்கில வார்த்தைதான் அஞ்சலையாக மாறியுள்ளதாம்.

அந்தாண்டை இந்தாண்டை

அந்தாண்டை இந்தாண்டை

இதுவும் ஒரு சென்னைத் தமிழின் முக்கிய வார்த்தை. ஆனால் இதன் பதம் முழுக்க முழுக்க ஆங்கிலம் என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். அதாவது அந்த end இந்த end என்பதுதான் நாளடைவில் அந்தாண்டை இந்தாண்டை என்று மாறி விட்டதாக கூறுகிறார்கள்.

கெத்து

கெத்து

செம கெத்து என்று கூறுவார்கள் தெரியுமா. இதில் கெத்து என்பதும் ஆங்கில வார்த்தைதான். கெய்ட் என்ற ஆங்கில வார்த்தைதான் கெத்து என்று மாறி விட்டதாம்.

ரீஜன்ட்

ரீஜன்ட்

இன்னொரு சென்னை வார்த்தை ரீஜன்ட்.. சார் ரொம்ப ரீஜன்ட்டானவர்பா என்று கூறுவார்கள். நிறையப் பேர் அதை டீசன்ட்டானவர் என்றுதான் நினைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் இது regent என்பதன் மாற்றம்தான் ரீஜன்ட்டாம்.

இப்படி நிறைய வார்த்தைகள் சென்னைத் தமிழில் ஆங்கிலத்தின் மறு உருவமாக வலம் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் மொழி ஆய்வாளர்கள்.

English summary
Madras Tamil is very peculiar and very intersting one to know. In Madras Tamil there are many words from many languages including English. Here is an intersting few of them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X