For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்வு காணப்படாத கமல் பார்வையிட்ட எண்ணூர் கழிமுக அபாயம்... நீரில் இறங்கி மக்கள் மனிதசங்கிலி!

சென்னை எண்ணூர் ஆறு பற்றி தயாரிக்கப்பட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தை திரும்பப் பெறக் கோரி மீனவர்கள் மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சென்னை எண்ணூரில் ஆறு என்ற ஒன்றே இல்லை என்று மோசடியாகத் தயாரிக்கப்பட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தைத் திரும்பப் பெறக்கோரி அந்தப் பகுதி மக்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணூர் உப்பங்கழியின் 6500 ஏக்கர் நீர் ஆதார நிலங்களை தொழிற்துறை ரியல் எஸ்டேட்டாக மாற்றுவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மோசடி இது என்று கூறி எண்ணூர் உப்பங்கழி மற்றும் கொற்றலை ஆற்றை காப்பாற்றுவதற்காக மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

இந்நிலையில் நீர் நிலைகளை பாதுகாக்க மறுக்கும் அரசை கண்டித்து வடசென்னை அனல்மின்நிலையம் அருகே மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று பெண்கள், குழந்தைகள் என்று பலரும் இது ஆறுதான், நிலமல்ல என்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு நீரில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்நிலைகளை காப்பாற்றவில்லை

நீர்நிலைகளை காப்பாற்றவில்லை

இது வெறும் தொடக்கம் தான் என்றும் அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 1996ல் எண்ணூரின் எளிதாக பாதிக்கக் கூடும் நீர்நிலைகளை கணக்கில் கொண்டு இந்தைப் பகுதியை அபிவிருத்தி மண்டலம் இல்லை என CRZ வரைபடத்தில் வர்ணித்து மத்திய அரசின் அங்கீகாரத்தை பெற்ற பின், 2017ம் ஆண்டில் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் திடீரென இந்த வரைபடத்திற்கு மாறாக புதிய அப்டேட் ஆன வரைபடம் இருக்கிறது. அதில் எண்ணூரில் ஆற்றுப் பகுதி நிலமாக காட்டப்பட்டுள்ளதே மக்களின் எதிர்ப்புக்கு காரணம்.

நீரின் தன்மை மாறிவிட்டது

நீரின் தன்மை மாறிவிட்டது

உப்பங்கழிகள் மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்டிருக்கும் எண்ணூர் சிறுகுடாவில் காமராஜ் போர்ட் லிமிடெட், வள்ளர் என்டிஇசிஎல், ஹெச்பிசிஎல், பிபிசிஎல் மற்றும் டான்ஜெட்க ஏங்கவே இந்தப் பகுதியை தொழில்துறை உட்கட்டமைப்புகளாக மாற்றியுள்ளன. இந்நிலையில் சிறுகுடாப் பகுதியில் உள்ள இந்த ஆக்கிரமிப்புகள்ல் நீரின் தன்மை மாறிவிட்டது என்பதும் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

வெள்ள பாதிப்பு

வெள்ள பாதிப்பு

நீரின் நடுவே கொட்டப்படும் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் நீரோட்டத்தின் எதிர்ப்பகுதிமக்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின்றன. வடகிழக்குப் பருவமழை காலங்களில் இந்தப் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

தீர்வு காணப்படாத பிரச்னை

தீர்வு காணப்படாத பிரச்னை

மேலும் இங்கு செய்யப்படும் ஆக்கிரமிப்புகள் வெள்ளப் பேரிடர் ஏற்படும் ஆபத்தை அதிகரித்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வடசென்னையை நெருங்கும் வெள்ள ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து பதிவிட்டதோடு அந்தப் பகுதியை பார்வையிட்டதையடுத்து அனைவரின் கவனமும் இதை நோக்கி திரும்பியது. எனினும் எந்த தீர்வும் எட்டப்படாமல் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Chennai Ennore fishermen form human chain in creek against the biggest water scam, with the demands of withdraw theh CCRZ map denying the existence of Ennore creek.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X