For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது புலிகள் நிரம்பிய காடு.. ரஜினியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக பந்திபூர் காட்டை தேர்வு செய்ததற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Controversy on Man Vs Wild, featuring Rajinikanth| ரஜினி கர்நாடகா சென்றது ஏன்?

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக பந்திபூர் காட்டை தேர்வு செய்ததற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சி தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. காடுகளுக்குள் சென்று அங்கு எப்படி வாழ்வது, எப்படி உயிர் பிழைப்பது என்பதை பற்றிய நிகழ்ச்சி ஆகும் இது. இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரும்பாலும் அடுத்த மாதம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. மேன் vs வைல்ட் நிகழ்ச்சி என்பது பியர் கிறில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி கர்நாடகா - கேரளாவை இணைக்கும் பந்திபூர் காட்டில் நடக்க உள்ளது.

    மோடி ரெக்கார்டை முறியடிப்பாரா ரஜினி.. ஒபாமா ஸ்டைலில் களமிறங்க திட்டம்.. மேன் vs வைல்டின் பின்னணி மோடி ரெக்கார்டை முறியடிப்பாரா ரஜினி.. ஒபாமா ஸ்டைலில் களமிறங்க திட்டம்.. மேன் vs வைல்டின் பின்னணி

    காடு எப்படி

    காடு எப்படி

    இந்த ஷூட்டிங் குறித்து தெரிந்து கொள்ளும் முன் பந்திபூர் காடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அதிக புலிகள் நடமாட்டம் இருக்கும் காடுகளில் பந்திபூர் காடும் ஒன்றாகும். இதனால் பந்திபூர் காடு மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளின் பட்டியலில் இருக்கிறது. இது புலிகள் காப்புக் காடு ஆகும். இங்கே மான்கள், புலிகள், யானைகள் அதிக அளவில் காணப்படும். அங்கு இதனால் கட்டுப்பாடுகளும் அதிகம்.

    எப்படி சாலை

    எப்படி சாலை

    கர்நாடகாவின் மைசூரில் இருந்து கேரளாவின் வயநாட்டை இணைக்கும் இடைப்பட்ட வழியில் இந்த காடு இருக்கிறது. இதன் பெரும்பகுதி கர்நாடகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடாது என்பதால் இந்த சாலை இரவு நேரத்தில் மூடப்படும். இரவு நேரத்தில் விலங்குகள் சாலையை கடப்பதை தெரியாமல் வாகனங்கள் மோத கூடாது என்பதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போலீஸ் சார்பாக அங்கு நிறைய கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது.

    ஷூட்டிங் அனுமதி இல்லை

    ஷூட்டிங் அனுமதி இல்லை

    அதேபோல் பந்திபூர் காட்டு பகுதியில் புகைப்படம் எடுக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி கிடையாது. அதேபோல் அங்கு ஷூட்டிங் நடத்தவும் அனுமதி கிடையாது. எப்போதும் அங்கு வனத்துறை தீவிர கண்காணிப்பில் இருக்கும். ஆனால் இதையும் மீறி அங்கு ஷூட்டிங் நடத்த மேன் vs வைல்ட் குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகளை தளர்த்தி அவர்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

    எப்படி கிடைத்தது

    எப்படி கிடைத்தது

    ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் அந்த நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது. யார் அனுமதி வழங்கியது என்று கேள்வி எழுந்துள்ளது. விலங்குகள் நலன் கருதி அங்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது. அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் ஏன் இப்போது தளர்த்தி இருக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். பந்திபூர் காட்டின் நலனுக்காக பல வருடங்களாக போராடி வரும் அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது.

    English summary
    Environmental activists oppose Bandipur Forest Man Vs Wild, featuring Rajinikanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X