For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் ஆன்மீக தலங்களை நாடும் தலைவர்கள்- அருள் யாருக்கு?

பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார் எடப்பாடியார், அவரையடுத்து டிடிவி தினகரன் மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்றார். முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் ஷீரடி சாய்பாபாவையும், சனி பகவானையும் வழிபட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் கோவில் கோவிலாக வலம் வந்து சித்தர்களையும், ஆன்மீக குருக்களையும் சந்தித்து ஆசி பெறத் தொடங்கி விட்டனர் தமிழக அரசியல் தலைவர்கள்.

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தரை சந்தித்தார் டிடிவி தினகரன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஷீரடிக்கும், சனி சிக்னாபூருக்கும் சென்று தரிசனம் செய்து திரும்பியுள்ளார்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள அதர்வண பத்ரகாளியை வணங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர்களும் மேல் மருவத்தூர் சித்தர் பீடம் சென்று பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.

மூக்குப்பொடி சித்தர்

மூக்குப்பொடி சித்தர்

டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரை வணங்கி, ஆசி பெற்றார். இவர் தரிசனம் கிடைத்தால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

ஷீரடி சாய்பாபா

ஷீரடி சாய்பாபா

இந்த நிலையில் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார் ஓபிஎஸ் அவருடன் மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், கேபி.முனுசாமி உள்ளிட்டோரும் சென்று தரிசனம் செய்தனர்.

சனி சிக்னாபூர்

சனி சிக்னாபூர்

பின்னர் சனி சிக்னாபூர் என்ற சனீஸ்வரன் கோயிலுக்கும் சென்றனர். அங்கே தன் அணியினருடன் சிறப்பு பூஜை நடத்தினார் ஓபிஎஸ்.

யாருக்கு அருள் கிடைக்கும்

யாருக்கு அருள் கிடைக்கும்

அதிமுகவின் மூன்று அணியினருமே சித்தர்களையும், ஆன்மீக குருக்களையும் நாடியுள்ளனர். யாருக்கு அருள் கிடைக்கிறதோ பார்க்கலாம்.

English summary
EPS, OPS and TTV Dinakaran offer prayers Temple. OPS Sai Baba Temple at Shirdi and Shani Shingnapur Temple. Edapadi Palansamy visited MelMaruvathur Aadhiparasakthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X