For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டில் மூவாயிரம் ஜவுளிக் கடைகள் அடைப்பு... மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்!

மத்திய அரசு, பருத்தி நூலின் விலையை 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்த்திவிட்டது. அதனால், அரசின் காட்டன் கார்ப்பரேஷனே பருத்தி நூலை அதிக அளவில் விறக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு ஜவுளிக்

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் பருத்தி நூல் விலை அதிகரித்ததைக் கண்டித்து ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபார நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பருத்தி நூலிலான லுங்கிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் காடா துணிகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்று வருகின்றன.

 In Erode cloth shop owners conducted shut down protest

தற்போது மத்திய அரசு பருத்தி நூல் விலையை 30 சதவிகிதம் திடீரென உயர்த்திய காரணத்தால், ஜவுளி வியாபாரம் பாதிக்கத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஈரோட்டில் உள்ள அனைத்து ஜவுளி வியாபார நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், காட்டன் கார்ப்பரேஷன் நிறுவனமே அதிக அளவில் பருத்தி நூல் கிடைக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில், ஈரோடு மாவட்ட அனைத்து ஜவுளிக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக ஜவுளி நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

English summary
In Erode cotton cloth shop owners conducted one day shut down protest. This protest was conducted as the central government hiked 30% price for cotton threads and it affects the business of cotton thread products.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X