For Daily Alerts
Just In
மாணவர், பெற்றோர்களுக்கு மன உளைச்சலை அளித்த நீட் தேர்வு: முத்தரசன் குற்றச்சாட்டு

நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ
ஈரோடு: வெளிமாநில தேர்வு மையங்கள் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைத்தது மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த மன உளைச்சலால்தான் மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்துள்ளதாகவும், இது மத்திய மாநில அரசுகளின் படுகொலையே எனவும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.