For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றம்.. எதிர்பாராதவிதமாக தேசியக்கொடி கிழிந்ததால் அதிருப்தி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றும்போது எதிர்பாராத விதமாக தேசியக்கொடி கிழிந்ததால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றும்போது எதிர்பாராத விதமாக தேசியக் கொடி கிழிந்ததால் விழாவில் கலந்துகொண்ட அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அதே போல, சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

Erode District Collector while hosting national flag torn

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாட வழக்கம் போல வ.உ.சி.பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை சுதந்திர தினத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வ.உ.சி. பூங்காவில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக தேசியக்கொடி கயிறில் சிக்கி கிழிந்தது. இதனால், சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அனைவரும் அதிருப்திக்குள்ளானார்கள்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக கிழிந்த தேசியக்கொடியை மாற்றிவிட்டு புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறுகையில், வழக்கமாக ஏற்றப்படும் பழைய கொடியை ஏற்றியதால் எதிர்பாராத விதமாக கிழிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Erode District Collector Prabhakar while hosting national flag torn in VOC Park in Erode. Then altered new national flag and hosted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X