For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு: ஈரோடு கூட்டுறவு சங்க தேர்தல் ஒத்திவைப்பு

ஈரோடு கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக-திமுக மோதல் காரணமாக கைகலப்பு ஏற்பட்டது

By A S Ramesh
Google Oneindia Tamil News

ஈரோடு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் கைகலப்பு ஏற்பட்டதால் தேர்தலை ஒத்திவைத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன கடன் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ம் தேதி நடைபெற்றது.இதில் அ.தி.மு.க, தி.மு.கவை சேர்ந்த 34 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.அ.தி.மு.கவில் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களை எதிர்த்து மற்றொரு தரப்பினர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

Erode Election Problem

இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.பரிசீலனையின்போது சட்டமன்ற உறுப்பினரின் எதிர்தரப்பினரான முன்னாள் தலைவர் சண்முகம் அணியினரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அ.தி.மு.கவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் தி.மு.கவினரின் சான்றிதழ்களை பறித்து கிழித்தனர்.இதனையடுத்து இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்ப சங்கத்தின் தேர்தலை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.அ.தி.மு.க மற்றும் தி.மு.கவினரின் கைகலப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Modakurichi in Erode district, was postponed due to the election confrontation with the Agricultural Cooperative austerity loan union. Former MLA Shanmugam was dismissed from the nomination papers of the legislator during the nomination today. This caused the rage The DMK-AIADMK had a debate. The authorities announced the postponement of the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X