For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை நுரையாக பொங்கும் நீர்: சாய ஆலையின் கழிவா? பொதுமக்கள் பீதி

ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து நுரையுடன் நீர் வெளியேறியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை நுரையாக பொங்கும் நீர்-வீடியோ

    ஈரோடு: சென்னிமலை அருகேயுள்ள ஒரத்துபாளையம் அணையிலிருந்து நுரையுடன் கூடிய தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்தது. அதே போல கோவை மாவட்டத்திலும் மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது. இந்த தண்ணீரானது ஒரத்துபாளையம் அணையிலிருந்து வெளியேறும்போது 5 அடிக்கு மேல் நுரை வருகிறது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலை கழிவுநீரை மழைநீருடன் திறந்து விட்டதால் நுரையுடன் வருகிறது என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சமடைந்துள்ளனர்.

    Erode Noyyal River

    கடந்த முறை 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த மழையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் இதே போல் நுரை பொங்கியது. அப்போதும் வெள்ள நீரை பயன்படுத்தி சாய ஆலைகள் சாய கழிவுகளை திறந்துவிட்டதாலேயே நுரை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், இது கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பு நுரைகள் என கூறி சமூகவலைதளங்களின் மீம்ஸ்க்கு ஆளானார்.

    தற்போதும் மழையினையும் பயன்படுத்தி முறைகேடாக இயங்கும் சில சாய சலவை ஆலைகள், சாய கழிவு நீரை கலக்கிறதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது போண்ற நுரை செல்லும் நீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் , மாசுக்கட்டுபாடு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாயகழிவு பிரச்சனையால் ஒரத்துபாளையம் அணையில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் மதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    People have been shocked by the release of water from the Oortuppalayam dam near Chennimalai, Erode district. Some of the dirt dey factories which were used by the rains, were caused by fear of mixing dye waste water. The public demand for the pollution and the health authorities to take action to prevent the spread of the epidemic from the foam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X