For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோடு: கடன்பாக்கி தராத சாய ஆலை உரிமையாளரை 4 நாட்கள் அறையில் பூட்டிய கொடூரம்

கடன்பாக்கி கொடுக்காத சாய ஆலை உரிமையாளரை 4 நாட்கள் அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

ஈரோடு: கடன் பிரச்சனையில் சாய தொழிற்சாலை உரிமையாளரை அறையில் அடைத்து வைத்ததாக எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பள்ளக்காட்டை சேர்ந்தவர் பெருமாள். சாயதொழிற்சாலை உரிமையாளரான இவர் பவானியை சேர்ந்த கந்தன் கலர்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நூலுக்கு சாயமிடும் பணியை செய்துள்ளார்.

erode petition

அந்த வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டியதிருந்தது. ஆனால் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டிய கந்தன் கலர்ஸ் உரிமையாளர் பரத்குமார் பெருமாளை கடத்தி சென்று தொழிற்சாலை அறையில் நான்கு நாட்களாக பூட்டி வைத்துள்ளார்.

மேலும் பெருமாள் தனது நண்பர்களிடம் பணம் பெற்று 4 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை கொடுத்துள்ளார். மேலும் அவரது இருசக்கர வாகனம், அலுவலக பொருட்கள் காசோலை, எல்.ஐ.சி பாண்ட் ஆகியவற்றை பறித்து கொண்ட பின்னரும் விடுவிக்காததால் அங்கிருந்து தப்பி வந்து ஈரோடு எஸ்பியிடம் நேற்று புகார் அளித்தார். தன்னை அடைத்து வைத்த பரத்குமார் மீது நடவடிக்கை எடுத்து தனது பொருட்களை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The owner of the dye factory was locked up in a 4-day room to collect a debt bargain near Erode. The dye factory owner fled from them and complained to Erode district SP. There is action on the gang of gangsters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X