For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து ஈரோட்டில் போராட்டம்: மாணவ, மாணவியர் பங்கேற்பு

ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து ஈரோட்டில் போராட்டம்-வீடியோ

    ஈரோடு: ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தென்னக ரயில்வே சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் செயல்படும் 9 பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும், அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை மூட வேண்டும் என்று கடந்த 30 ம் தேதி ரயில்வேதுறை உத்தரவிட்டது. ரயில்வேயின் இந்த உத்தரவு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    erode railway arpattam

    இந்நிலையில் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஈரோடு ரயில்வே பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. மேலும் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    English summary
    A demonstration was held in Erode, denouncing the closure of railway schools. The demonstration was held in front of Erode Railway School on behalf of the Southern Railway Mastore Union. Over 300 railway workers and student students participated in it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X