For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்கள் நிழல் கூட பெரியாரை தொட முடியாது.. எச் ராஜாவுக்கு குஷ்பு சவால்

உங்கள் நிழல் கூட பெரியாரை தொட முடியாது என எச் ராஜாவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: உங்கள் நிழல் கூட பெரியாரை தொட முடியாது என எச் ராஜாவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Even H Raja shadow cannot touch the statue of Periyar: khushbu

எச் ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எச் ராஜாவை தரக்குறைவான வார்த்தையால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு திட்டியுள்ளார்.

மேலும் எச் ராஜாவை கட்சியில் இருந்து நீக்க பாஜகவுக்கு தைரியம் உள்ளதா என பார்க்கலாம். நான் சவால் விடுகிறேன், பெரியார் சிலையை உடைக்கப்போகும் நாளை சொல்லுங்கள் அப்போது நானும் அங்கு இருப்பேன்

என்னையும் என்னை போன்ற பலரையும் தாண்டி செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை பார்க்கிறேன். உங்கள் நிழல் கூட பெரியார் சிலையை தொட முடியாது. இவ்வாறு குஷ்பு தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Khushbu has said that even H Raja shadow cannot touch the statue of Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X