For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடியே வாயைத் திறக்காமல் இருக்கிறார்.. மோடியை சொல்லி என்ன புண்ணியம்.. விவசாயிகள் விரக்தி!

தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் குறித்து இதுவரை தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி வாயே திறக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் குறித்து இதுவரை தமிழக அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. தமிழக அரசின் இந்த செயல்பாடற்ற நிலை தமிழக மக்களிடையே பெரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் வவிசாயிகள் 31வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எலிக்கறி உண்பது பாம்புக்கறி உண்பது, பிச்சையெடுப்பது, சவம் போல் கிடப்பது, பிரதமர் மோடியின் காலில் விழுந்து கெஞ்சுவது என ஒவ்வொரு நாளும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதுதவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் விவசாயிகளை நேரில் சந்தித் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளை இதுவரை சந்திக்கவில்லை. அவர்களின் பிரச்சனைகளை கேட்கக்கூட விரும்பவில்லை. விவசாயிகளை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் போராட்டத்தை எப்படியாவது வாபஸ் பெற செய்ய வேண்டும் என்பதில் தான் குறியாக உள்ளனர்.

தமிழக அரசும் வாய் திறக்கலையே

தமிழக அரசும் வாய் திறக்கலையே

மத்திய அரசுதான் மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்றால், தமிக அரசும் கூட இதுவரை டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து வாய்திறக்கவில்லை. கடும் குளிர், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு இதுவரை போராட்டத்தை திரும்ப பெறக்கோரியோ, கோரிக்கைகைளை நிறைவேற்றுவதுக் குறித்தோ ஒரு அறிக்கைக்கூட விட வில்லை.

என்ன நடந்தால் எனக்கென்ன?

என்ன நடந்தால் எனக்கென்ன?

பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எந்தப் போராட்டம் எங்கு நடந்தால் எனக்கென்ன என்று இருக்கிறது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு. கடந்த திங்கள் கிழமை பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக கூறி ஏமாற்றப்பட்டதால் விரக்தியடைந்த விவசாயிகள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.

என்னவென்று கேட்கவில்லை

என்னவென்று கேட்கவில்லை

கொளுத்தும் வெயிலில் விவசாயிகள் நடுரோட்டில் நிர்வாணமகா உருண்டு புரண்டு போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னவென்று கேட்கவில்லை.

மாணவர்கள் மட்டும் சேரக்கூடாது..

மாணவர்கள் மட்டும் சேரக்கூடாது..

ஆனால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதராவாக போராட்டம் நடைபெற்று விடக்கூடாது, மெரினாவ்ல இளைஞர்கள் திரண்டு விடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ள எடப்பாடி அரசு அதற்கான வேலைகளை தீயாக செய்துவருகிறது என்தை யாரும் மறுக்க முடியாது..

English summary
Even Tamilnadu government not talking about farmers protest in Delhi. Tamilnadu governments stands on farmers issue is giving shock to the Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X