For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரந்தரமாக சிறை செல்வார் தினகரன்... ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆருடம்

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீண்டும் சிறைக்கு நிரந்தரமாகச் செல்வார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

ராஜபாளையம்: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீண்டும் சிறைக்கு நிரந்தரமாகச் செல்வார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் கொடுக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் நிலுவையில் உள்ள பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இருக்க கூடாது.

 EVKS. Elangovan said, TTV Dinakaran going to jail permanently

மேலும் விவசாயிகள் கால்நடைகளை விற்ப்பதற்கும் வாங்குவதற்கும் எந்தத் தடையும் இருக்க கூடாது இந்த நிலை நீடித்தால் ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் புரட்சி செய்யக் கூடியநிலை ஏற்படும்.

அதனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் ஜி.எஸ்.டி.மசோதாவை பொருத்தவரையில் அரைவேக்காடுதனமாகவே அறிவித்திருக்கிறார்கள் இதனால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியது மிருகத்தனமான செயல் கண்டிக்கத்தக்கது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் 14ம் தேதி நடைபெறும் சட்ட மன்ற கூட்டத் தொடர் தான்அதிமுக அரசுக்கு இறுதி கூட்டமாக இருக்கும்.தினகரன் விரைவில் நிரந்தரமாக சிறை செல்வது உறுதி. மகளிர் காங்கிரஸ் என்றாலே தகராறுதான். மேலும் அந்த சம்பவம் சம்மந்தமாக எனக்கு முழு விவரம் தெரிந்தவுடன் கூறுகிறேன். இல்லை என்றால் மகளிர் அணியினர் என் மீது பாய்வதற்க்கு வாய்ப்பு உண்டு" என்று தெரிவித்தார்.

English summary
TTV Dinakaran going to jail permanently, EVKS. Elangovan said at press meet in Rajapalayam .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X