For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 லட்சத்துக்கு ஷூட் போட்டால்தான் அய்யாகண்ணுவை மோடி சந்திப்பாரா... ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர்

ரூ. 10 லட்சத்திற்கு ஷூட் போட்டால்தான் அய்யாகண்ணு போன்ற விவசாயிகளை பிரதமர் மோடி சந்திப்பாரா என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சட்டை போடாததால் மோடி சந்திக்கவில்லை என்று கூறினார்கள். அப்படி என்றால் 10 லட்சம் ரூபாய்க்கு ஷூட் போட்டால்தான் மோடி விவசாயிகளை சந்திப்பாரா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் விவசாயிகளை சந்திக்காத பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தார்.

விவசாயிகள் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பனியிலும் வெயிலிலின் கிடந்து போராடினார்கள்.

சட்டை இல்லை

சட்டை இல்லை

பிரதமர் ஏன் அவர்களை பார்க்கவில்லை. சட்டைப் போடாமல் விவசாயிகள் வருகிறார்கள். அதனால் அவர்களை பிரதமர் பார்க்க முடியாது என்று கூறப்பட்டது.

10 லட்சத்திற்கு ஷூட்

10 லட்சத்திற்கு ஷூட்

ஒரு வேளை பிரதமர் விவசாயிகள் எல்லாம் தன்னைப் போல் 10 லட்ச ரூபாய்க்கு ஷூட் கோட் போட்டால்தான் பார்ப்பாரா என்று தெரியவில்லை. ஜனநாயகத்தில் விவசாயிகளை சந்திக்க முடியாது என்று சொல்வது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம்.

பிரதமருக்கு குஷி

பிரதமருக்கு குஷி

இன்னாள் முன்னாள் முதல்வர்கள் பிரதமரைப் பார்க்க அடிக்கடி டெல்லி செல்கிறார்கள். பிரதமரின் காலில் சாஷ்ஸ்டாங்கமாக விழத்தான் அவர்கள் அங்கு செல்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வது பிரதமருக்கும் குஷியாகிவிடுகிறது.

குற்றம்

குற்றம்

ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு கடற்கரையில் மணிமண்டபம் கட்டக் கூடாது. அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது. இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

English summary
Congress leader EVKS Ilangovan has attacked Modi for not meeting with farmers, who staged protest in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X