For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்சே... ஜெயந்தி மீது ஈவிகேஎஸ் காட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயந்தி நடராஜனின் தாத்தாவான தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அரிசி பதுக்கியவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன், காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் கட்சியில் இருந்த தனக்கு, உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

EVKS slams former Tamilnadu CM Bhaktavatsalam

இந்நிலையில், ஜெயந்தி நடராஜனின் விலகல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனடியாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர், ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதல்வருமான பக்தவத்சலத்தை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

இளங்கோவன் கூறுகையில், ‘தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது பக்தவத்சலம் கிடங்கில் அரிசியைப் பதுக்கியவர். பெருந்தலைவர் காமராஜரின் நற்காரியங்கள் பக்தவத்சலத்தின் ஆட்சியால் வீணானது.

1967ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு பக்தவத்சலமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பக்தவத்சலத்திற்குப் பிறகு, அதாவது கடந்த 1967ம் ஆண்டிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை, காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட அழிந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயந்தி நடராஜன் விலகியதற்கு அவரது தாத்தாவை வம்பிக்கிழுத்துள்ளார் இளங்கோவன் என்பது பரபரப்பை கூடுதலாக்கியுள்ளது.

English summary
The Tamilnadu Congress committee president E.V.K.S.Elangovan has slammed the former Tamilnadu chief minister and former union minister Jayanthi Natarajan's grandfather Bhaktavatsalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X