For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது?.. நாடு சீரழியும்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத்

Google Oneindia Tamil News

சென்னை: 70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது? மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு சீரழிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத். இவரது செயல் பலரது பாராட்டுகளை பெற்றது.

EX IAS Officer Kannan Gopinath says about Citizenship Amendment act

சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், கண்ணன் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் கண்ணன் கோபிநாத் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மூலம் முயற்சித்து வருகிறேன். அரசுக்கு எதிராக போராடுவதால் எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

"ஆல் இஸ் வெல்", வெறும் தலைவலிதான் என்று டிரம்ப் சொன்னாரே.. 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயமாமே

தேசிய மக்கள் தொகை பதிவேடு கேட்கும் 70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது. மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்களால் மத்திய அரசு பின்னடைவை சந்தித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் தெரிந்துதான் போராடுகிறார்கள். மாணவர்களிடம் துணிச்சல் இருக்கிறது என்றார்.

English summary
EX IAS Officer Kannan Gopinath asks How come the people go and get for 70 years ago document?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X