For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்த தயாநிதி மாறன்!

திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற போது அவருக்கு வலது புறமோ அல்லது இடது புறமோ அமரும் அவரது பேரன் தயாநிதிமாறன் இன்று கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போதும், அதற்குப் பின்னரும் கருணாநிதி பங்கேற்ற அனைத்து கூட்டங்களிலும் அவருக்கு சரிசமமாக வைத்து அழகு பார்த்தார், ஆனால் இன்று ஸ்டாலின் மேடையில் அவர் இல்லாதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் செல்லப் பேரன் தயாநிதி மாறன் என்று 2010 காலகட்டத்தில் அனைவராலும் பேசப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தது கட்சியில் அவருக்கு அளித்த முக்கியத்துவம். கருணாநிதி பங்கேற்கும் அனைத்து பொதுக்கூட்டங்கள், அரசியல் பொதுமேடைகளில் கருணாநிதிக்கு பக்கத்திலேயே தயாநிதி மாறனுக்கு இருக்கை போடப்படும்.

Ex minister Dayanidhi Maran who shared dias with Karunanidhi is not in stalin's stage

கருணாநிதியுடன் மிகுந்த நெருக்கத்துடன் மாறன் இருப்பது ஒரு கலாகட்டத்தில் ஸ்டாலினுக்கே எரிச்சலைக் கூட ஏற்படுத்தியது. அழகிரி-மாறன் சகோதரர்கள் மோதல் வெடித்தபோது அண்ணனின் பக்கம் நின்றார் ஸ்டாலின்.

மாறன் சகோதரர்கள்

திமுகவில் அடுத்த முக்கிய தலைவர் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தி ஸ்டாலினுக்கு ஆதரவான முடிவை வெளியிட்ட நிலையில், ஸ்டாலின் அவ்வாறு நடந்து கொண்டது மாறன் சகோதரக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இதையடுத்து அவர்களும் கருணாநிதி குடும்பத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.

தயாநிதி - கருணாநிதி

இதனையடுத்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கண்கள் பணித்து, இதயம் இனித்து அனைவரம் ஒன்று கூடி அதன் பிறகு கருணாநிதியுடன் தயாநிதி மிகவும் நெருக்கம் காட்டினார்.

100 இருக்கை தள்ளி

ஆனால் அப்படியெல்லாம் அழகுபார்த்த தயாநிதி இன்று மேடையில் இல்லாமல் தலைவர்களுக்காக 100 இருக்கைகள் தள்ளி போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.

ராஜா முன்னாடி

2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்டவரும் திமுகவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியவர் என்றெல்லாம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டவருமான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா விழா மேடையில் அமர்ந்திருந்தார்.

English summary
Ex minister Dayanidhi maran surprisingly not placed in the stalin's diece who organised karunanidhi's diamond jubilee celebration
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X