For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கான விடுதி.. சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

முன்னாள் எம்எல்ஏக்களுக்கான விடுதி கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியை சென்னையில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் இன்று திறந்து வைத்தார்.

சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதிக்கு 2012-ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 76,821 சது அடி பரப்பில் 10 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட அந்த கட்டிடத்தினை சபாநாயகர் தனபால் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Ex-MLAs Hostel open for accommodation

இந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியானது 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 68 அறைகள் உள்ளன, ஒருநாள் வாடகை ரூ.300 என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கள் மாதத்தில் 5 நாட்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

English summary
TN Speaker has opened a Hostel for former MLAs in Chennai today. Ministers including the Chief Minister Palaniasamy, Deputy Chief Minister O.Panneerselvam participated in this event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X