For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி ரெய்டுக்குள்ளான முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் இன்றுடன் ஓய்வு

வருமான வரித் துறை சோதனைக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித் துறை சோதனைக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்கு இன்று 60 வயது நிறைவடைய உள்ள நிலையில் அவர் ஓய்வு பெறுகிறார்.

தலைமை செயலாளராக இருந்த ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது கடந்த ஜூன் 2016-இல் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தியதில் அவர் ராம் மோகன ராவின் பெயரை கூறியதாக தெரிகிறது.

EX TN Chief Secretary RamMohan Rao retiring today

இதைத் தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்றுடன் 60 வயது நிறைவடைய உள்ளதால் அவர் ஓய்வு பெறுகிறார்.

English summary
Ex TN Chief Secretary Ram Mohan Rao retiring today as he is going to complete 60 years. After IT raid he got posting as Director of the Entrepreneurship Development Institute, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X