For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?... மீத்தேன் எடுக்க ஐடியா கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: விவசாய நிலங்களில்தான் மீத்தேன் வாயுவை எடுக்கமுடியுமா என்ன. அதை எடுப்பதற்கு பல வழிகள் உள்ளன என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டதத்தில் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு, தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Except on agricultural lands, some ways to take methane, says G.V.prakash

இதுகுறித்து அவர் கூறுகையில், விவசாய பூமியில்தான் மீத்தேனை எடுக்க முடியுமா என்ன? ஆய்வுப்படி குப்பைக் கிடங்கு, ரசாயன ஆலை கழிவு, மாட்டு சாணம், விவசாயக் கழிவு, காய்ந்த மரங்கள், ஈசல் புற்று, எறும்பு புற்று ஆகியவற்றின் மூலம் 85 சதவீதம் மீத்தேன் எடுக்கலாம்.

ஆனால் விவசாய நிலங்களில் வெறும் 12 சதவீதம் மட்டுமே மீத்தேன் கிடைக்கும் நிலையில் விளை நிலங்களை குறிவைப்பது எதற்காக? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக நலனுக்காக தற்போது நடிகர் கமலஹாசன் குரல் கொடுத்து வரும் நிலையில் இளம் இசையமைப்பாளரும் - நடிகருமான ஜி.வி.பிரகாஷும் சமூக அக்கறை கொண்டு தொடர்ந்து கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The Government can get 85 percentage Methane can get from garbage waste, agricultural wastages, cow dung, etc says Actor G.V.Prakash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X