For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட் 2015-16: தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில், ஏழை, நடுத்தர மக்கள் முதல் பெரும் தொழில் அதிபர்கள் வரை அனை வரையும் திருப்திப்படுத்தும் திட்டங்கள் தேவை என்ற கருத்து அனைத்து தரப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ரயில்வே துறையில் மேற் கொள்ளப்பட்டுள்ள நவீன தொழில் நுட்ப வசதி, உள்கட்டமைப்பு வசதி, புதிய ரயில் போக்குவரத்து வழித்தடம், சரக்கு, பயணிகள் கட்ட ணங்கள் குறைப்பு நடவடிக்கை, ரயில் பெட்டிகளில் தொல்லையற்ற நிம்மதியான பயணம் என பல பிரச்சினைக்கும் பட்ஜெட் மூலம் தீர்வு காணப்படுமா என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டணம் குறையுமா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலையை குறைத்த மத்திய அரசு, டீசலில் இயங்கும் ரயில் கட்டணத்தை குறைக்கவில்லை என்பது சேலம் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவரும், சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ.ஜெயசீலனின் ஆதங்கமாக உள்ளது.

தமிழகத்திற்கு புதிய ரயில்கள்

தமிழகத்திற்கு புதிய ரயில்கள்

ரயில்வே பட்ஜெட்டை பொருத்த வரை வட மாநிலங்களுக்கு வளம் சேர்க்கும் திட்டங்களும், தென்னக மாநிலங்களுக்கு தேவையில்லாத திட்டங்களுமே வந்து சேர்கிறது. இந்த பட்ஜெட்டிலாவது தமிழகத்துக்கு கூடுதல் புதிய ரயில்களை இயக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள்

உள்கட்டமைப்பு வசதிகள்

ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு உள்ளது. பயணிகள் வந்து செல்ல சுரங்க பாதை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர், மருத்துவ வசதி, கழிவறை வசதி என மேம்படுத்த வேண்டிய ரயில் நிலையங்கள் பட்டியல், ரயில் பெட்டியை காட்டிலும் நீண்டு செல்கிறது.

புல்லட்ரயில்

புல்லட்ரயில்

உள்கட்டமைப்புக்கு ஏங்கும் ரயில் நிலையங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த பிறகு, புல்லட் ரயில் விடும் திட்டத்தை கையில் எடுக்கலாம் என்பதும் பயணிகளின் கோரிக்கையாகும்.

ரயில்கள் அறிவிப்பு

ரயில்கள் அறிவிப்பு

சென்னை -கன்னியாகுமரி இரு வழி இருப்பு பாதை; சென்னை-பெங்களூருக்கு தனி சரக்கு ரயில் போக்குவரத்து; சென்னை - தூத்துக்குடிக்கு தனி சரக்கு ரயில் போக்குவரத்து; புதிய அதிவேக பயணிகள் ரயில்களான சென்னை - கன்னியாகுமரி; கோவை-மதுரை; கோவை-சென்னை; சென்னை-பெங்களூருக்கான ரயில்கள் குறித்த அறிவிப்பு நிறைவேற்றப் படவில்லை.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

மூத்த குடிமக்கள் ஆதார் அட்டை காண்பித்து கட்டணத்தில் சலுகை பெற வேண்டும் என்கின்றனர். ஆதார் அட்டை முழுமையாக மக்கள் பெற்றிராத நிலையில், இதனை கட்டாயமாக்க கூடாது.

துறைமுகங்களை இணைக்க

துறைமுகங்களை இணைக்க

துறைமுக வழிதடங்களில் புதிய ரயில் திட்டத்தின் தேவை அவசியமாகிறது. தூத்துக்குடி-கடலூர் துறைமுகங்களை இணைக் கவும், கடலூர்-சென்னை துறை முகத்தை இணைக்கவும் வகையிலான புதிய ரயில் திட்டம் கொண்டு வர முடியும். இதனால், வியாபாரிகள் பொருட்களை ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வர ஏதுவாக அமையும்.

முன்பதிவு இல்லாத பெட்டிகள்

முன்பதிவு இல்லாத பெட்டிகள்

முன்பதிவு இல்லாத பெட்டியில் 75 பேர் வரை பயணம் செய்யலாம். ஆனால், 200 பேர் வரை பயணம் செய்கின்ற அவலம் உள்ளது. கழிவறை துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், அங்கு அடைத்துக்கொண்டு பயணம் செய்யும் மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, பயணிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதும் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

மதுரை மக்களின் எதிர்பார்ப்பு

மதுரை மக்களின் எதிர்பார்ப்பு

சென்னை-கன்னியாகுமரி வரை இரு வழித்தடத்திற்கான பணிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும். திண்டுக்கல் வழியாக போடிக்கு ரயில் பாதை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் பெரியகுளத்திற்கு ரயில் சேவை கிடைக்கும். இப்பகுதிகளில் உள்ள மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மேம்பாடு அடையும் என்கிறார் மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேலு.

மதுரை – போடி

மதுரை – போடி

மதுரை-போடி இடையே அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும். மதுரை-போடி இடையே அகல ரயில் பாதைத்திட்டம் நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்து மூலமாக மட்டுமே சுமார் ரூ.700 கோடி வருவாய் ரயில்வே துறைக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுதவிர தேவாரத்தில் 1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதைத்திட்டம் நிறைவேற்றினால் நியூட்ரினோ மையத்திற்கு வருபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் இம்மையத்திற்கு கருவிகள் ரயில் மார்க்கமாக பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும்.

கோவை பயணிகள்

கோவை பயணிகள்

கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு ரயில் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து தேவை என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை-சென்னை இடையே இரவு ரயில் கட்டாயம் தேவை எனவும் கோத்தகிரி- பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில்களை இயக்கவும் மக்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறனர்.

குமரி பயணிகள் எதிர்பார்ப்பு

குமரி பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை இருப்பதாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். குமரி - ராமேஸ்வரம் இடையே நேரடி ரயில் அறிவிக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

English summary
TamilNadu People Expectations are high from the Railway Minister amidst the latter's firmness to bring in fundamental changes in the Railways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X