For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாம்பரம் -கொல்லம் சிறப்பு ரயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள் இணைப்பு

தாம்பரம் -கொல்லம் சிறப்பு ரயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரம் -கொல்லம் சிறப்பு ரயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக-கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில்பாதையாக விளங்கிய செங்கோட்டை-கொல்லம் மீட்டர் கேஜ் ரயில்பாதையில் 2010ஆம் ஆண்டு முதல் அகல ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியது.

extra coaches added in chennai tambaram and kollam rail

இதைத்தொடர்ந்து இந்த தடத்தில் 8 ஆண்டுகாலமாக ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து முடிந்த நிலையில் ரயில் போக்குவரத்து தொடங்க தாமதமாகி வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த தடத்தில் மீண்டும் சிறப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த தடத்தில் தாம்பரம்-கொல்லம் இடையே முதல் ரயில் இயக்கம் நடைபபெற்றபோது கேரள மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும். இந்த கோடை சிறப்பு ரயிலில், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இரண்டு இணைக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 9 முதல் தாம்பரம்-கொல்லம் சிறப்பு ரயில் இயங்குகிறது. 15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், இரு செகண்ட் சிட்டிங் பெட்டிகள் அகற்றபட்டு, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இம்மாத இறுதிக்குள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

English summary
Extra coaches has been added in Chennai Tambaram and kollam Rail. Those two coaches will be in AC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X