For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுமிகளின் போட்டோக்களை ஆபாசமாக வெளியிட்ட 2 தமிழ் வக்கிர பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சிறுமிகளை அசிங்கப்படுத்தும் வகையிலான இரு தமிழ் பேஸ்புக் அக்கவுண்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் நன்மைகள் கிடைப்பதை போல, பல தீமைகளும் சேர்ந்தே விளைகின்றன. பாலியல் கதைகளுக்கான வெப்சைட்டுகளை போல, பாலியலுக்கான பேஸ்புக் பக்கங்களையும் விஷமிகள் திறந்துள்ளனர்.

அதிலும் சிறுவர், சிறுமிகள் பற்றிய போட்டோக்கள், கதைகளுக்காக தனியாக திறக்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கங்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.

மலையாளத்தில் முடக்கம்

மலையாளத்தில் முடக்கம்

சமீபத்தில் மலையாளத்தில் இதுபோன்ற 3 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், தமிழிலும் விஷம கருத்துக்கள், படங்களை போட்டு வந்த இரு பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

விஷமிகள்

விஷமிகள்

அதில் ஒரு பேஸ்புக் பக்கம் பெயர், சின்ன பொண்ணு வெறியர்கள். இந்த பேஸ்புக் பக்கத்தில் சிறுமிகள் போட்டோக்கள் ஆடைகளுடன் போடப்பட்டிருந்தாலும், அவை யாரோ ஷேர் செய்தவை. அவற்றை டவுன்லோடு செய்து அவர்களுக்கே தெரியாமல் இந்த போஸ்டில் போட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு சிறுமி படத்துக்கு மேலேயும், இந்த சிறுமியை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கொச்சையாக கேள்வி கேட்டுள்ளார் அட்மின்.

பலாத்காரம்

பலாத்காரம்

மற்றொரு பேஸ்புக்பக்கம், சின்ன பொண்ணை கற்பழிப்போம் என்பதாகும். இதில் சற்று வயது கூடிய சிறுமிகள் படங்களை போட்டுள்ள வக்கிரம் பிடித்த அட்மின், சிறுமிகள் படத்தை போட்டு, ஆபாச கேள்விகளை கேட்டுள்ளார். சில படங்களிலுள்ள சிறுமிகளை, எத்தனை பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்போகிறீர்கள் என்று கேட்டும் போஸ்ட் செய்துள்ளார்.

இரு பக்கங்கள் முடக்கம்

இரு பக்கங்கள் முடக்கம்

இதுகுறித்து பேஸ்புக் அட்மினுக்கு அனுப்பப்பட்ட புகார்களை தொடர்ந்து இவ்விரு பேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக் விதிமுறை

பேஸ்புக் விதிமுறை

பேஸ்புக் விதிமுறைப்படி, நிர்வாண போட்டோக்களோ, உடலுறவு போட்டோக்களோ, ஆபாச போட்டோக்களோ பதிவேற்றம் செய்யப்படக்கூடாது. ஆனால், இதையெல்லாம் பேஸ்புக் நிர்வாகம் கண்டுகொள்வதாக இல்லை. சுப்ரீம் கோர்ட் வக்கீல் வகுல் ஷர்மா கூறுகையில், "பேஸ்புக் பக்க நிர்வாகத்தினருக்கு, சற்று பொறுப்புணர்ச்சி அவசியம். இதுபோன்ற ஆபாச போஸ்டுகளை கண்காணித்து அவற்றை முடக்க வேண்டும்" என்றார்.

English summary
Just a few weeks after three Facebook pages in Malayalam to attract paedophiles, two more similar pages have been shut down, this time in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X