For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருகிறது பிரிவினை.. நீங்கள் பணக்காரரா, ஏழையா என சோதனை செய்யப் போகும் பேஸ்புக்.. ஏன்?

பேஸ்புக் அதன் பயனாளிகளை அவர்களின் பொருளாதார ரீதியா பாகுபடுத்த இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பொதுவாக யூ டியூப்களில் வீடியோ பார்க்கும் போது திடீர் என்று ஒரு பக்கம் வந்து சர்வே எடுக்க முயற்சி செய்யும். நீங்கள் என்ன போன் பயன்படுத்துகிறீர்கள், என்ன சோப் பயன்படுத்துகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கும்.

தற்போது இதேபோல் பேஸ்புக் சர்வே எடுக்க இருக்கிறது. ஆனால் பேஸ்புக் எடுக்க போகும் இந்த சர்வே பெரிய திட்டத்தை எதிர்நோக்கி செயல்பட்டு வருகிறது.

அதன்படி பேஸ்புக் அதன் பயனாளிகளை அவர்களின் பொருளாதார ரீதியா பாகுபடுத்த இருக்கிறது.

காப்புரிமை

காப்புரிமை

தற்போது இந்த திட்டத்திற்காக பேஸ்புக் காப்புரிமை பெற இருக்கிறது. நீங்கள் பணக்காரரா, ஏழையா, உங்களிடம் பணம் இருக்கிறதா, இல்லையா , நீங்கள் செலவு செய்வீர்களா, இல்லையா என்றெல்லாம் இதன் மூலம் கண்டுபிடிக்கப்படும். இதை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தும்.

செய்யும்

செய்யும்

இனி கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் பேஸ்புக் கேள்வி கேட்கும். நீங்கள் எதை விரும்பி சாப்பிடுவீர்கள் தொடங்கி, வெளியூர் சென்றால் ஸ்லீப்பர் பேருந்தா, புஷ் பேக் சீட்டா என்றெல்லாம் கேள்வி கேட்கும். உங்கள் வாழ்வாதாரம் என்ன என்று நீங்கள் ஷேர் செய்யும் படத்தை வைத்து கூட கண்டுபிடிக்கும்.

எதற்காக

எதற்காக

இதன் மூலம் உங்களுக்கு பேஸ்புக்கில் என்னவிதமான விளம்பரங்கள் பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கும். நீங்கள் வாங்க கூடிய பொருட்களை விளம்பரம் செய்யும். மேலும் பணக்காரர்களுக்கு விலை அதிகமான பொருட்களை விளம்பரமாக காட்டும்.

சர்ச்சை

சர்ச்சை

ஏற்கனவே பேஸ்புக் செய்தி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் முடிவை எடுத்துள்ளது. மேலும் மக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்தது. தற்போது புதிய நவீன தீண்டாமையை அறிமுகப்படுத்த இருக்கிறது.

English summary
Facebook set to separate people as rich and poor. It patents the technology for their future use. It will use it for their advertisement purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X