For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லேடீஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்து ஆசைக்கு இணங்க மிரட்டிய அயோக்கியன் கைது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் பாத்ரூமில் கேமரா வைத்து பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த நபரைப் போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கார்களில் பொருத்தப்படும் சிவப்பு குழல் விளக்குகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கின.

தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி அவர் நாடகமாடியதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். உரிய முறையில் விசாரணை நடத்திய போது அவர் உண்மையைக் கக்கி விட்டார். இதையடுத்து போலீஸார் அந்த மோசடி ஆசாமியை கைது செய்துள்ளனர்.

லேடீஸ் ஹாஸ்டலில் நடந்த இந்த அக்கிரமச் செயலால் அங்கு தங்கியுள்ள பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளை கைதான நபர் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பெசன்ட் நகர் தாமோதரன்

பெசன்ட் நகர் தாமோதரன்

பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் தனது வீட்டின் கீழ்த் தளத்தில் லேடீஸ் ஹாஸ்டலை நடத்தி வருகிறார். மாடியில் இவர் குடியிருந்து வருகிறார். இந்த லேடீஸ் ஹாஸ்டலின் பாத்ரூமில் ரகசியக் கேமரா வைக்கப்பட்டிருப்பதை அங்கு தங்கியுள்ள பெண்கள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஹாஸ்டல் நிர்வாகியிடம் தெரிவிக்க, அவரும் அதிர்ச்சி அடைந்து திருவான்மியூர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

நான் சிபிஐ அதிகாரி

நான் சிபிஐ அதிகாரி

இதையடுத்து போலீஸார் தாமோதரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அவர் சிபிஐ சப் இன்ஸ்பெக்டர் என்று கூறினார். இனால் குழப்பமடைந்த போலீஸார் அவர் காட்டிய அடையாள அட்டையைப் பார்த்தனர். அதில் அவர்களுக்கு பொறி தட்டவே அவரை காவல நிலையத்திற்குக் கூட்டிச் சென்று சிறப்பான விசாரணையைத் தொடங்கினர். அதில் அவர் உண்மையைக் கக்கி விட்டார்.

வீட்டில் சிவப்பு விளக்கு

வீட்டில் சிவப்பு விளக்கு

இதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர். சோதனையில் சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், வக்கீல், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என 3 போலியான அடையாள அட்டைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலி அடையாள அட்டைகள், அவர் பயன்படுத்திய சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார், காவல்துறையின் இரண்டு சீருடைகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண்கள் குளிக்கும் காட்சிகள்

பெண்கள் குளிக்கும் காட்சிகள்

அவரது செல்போனைப் பறிமுதல் செய்து ஆராய்ந்த போலீஸார் அதில் பெண்கள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து தாமோதரனை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறிக் கொண்டு வலம் வந்துள்ளார் தாமோதரன். போலியான அடையாள அட்டையை வைத்துக்கொண்டு சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் வலம் வந்துள்ளார். தனக்கு அரசு வேலை கிடைத்து உள்ளதாக அவரது பெற்றோரையும் ஏமாற்றி வந்து உள்ளார்.

வட்டி முருகன் மகன்

வட்டி முருகன் மகன்

தாமோதரனின் சொந்த ஊர் நாமக்கல். இவரது தந்தை முருகன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இங்கு விடுதி நடத்திக் கொண்டு அங்கு தங்கியுள்ள பெண்களி அந்தரங்கத்தை இதுபோல அயோக்கியத்தனமாக பதிவு செய்துள்ளார். இந்தக் காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி பணமும் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

rn rn

பாலியல் மிரட்டல்

மேலும் ஒரு பெண்ணிடம் இந்தப் படத்தைக் காட்டி இது வெளியில் போகாமல் இருக்க வேண்டுமானால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூற அந்தப் பெண் துணிச்சலுடன், விடுதி நிர்வாகியிடம் புகார் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்தே இந்த அயோக்கியனின் லீலைகள் வெளியில் வந்துள்ளன. இந்த அயோக்கியன் வேறு என்னெவெல்லாம் செய்துள்ளார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

English summary
Thiruvanmiyur police team has arrested a fake CBI officer for filming women's bath in ladies hostel in Besant Nagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X