For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சர்ச்சை கேள்வியால் மாணவர்கள் குழப்பம் !

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சமூக அறிவியல் தேர்வில் பதிலே இல்லாத கேள்வி கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு கேள்வி தவறாக இடம்பெற்றத்தை கண்டு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினா கேள்வி பகுதியில் 13வது கேள்வியாக இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்? எனக் கேட்கப்பட்டிருந்தது.

false question in 10th public exam

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் திட்டக்குழு தலைவர் யார் எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் பாடப்புத்தக்கத்தில் திட்டக்குழு தலைவர் பிரதமர் என இருப்பதால் அதையே பதிலாக அளித்தாக சில மாணவர்கள் கூறுகின்றனர்.

false question in 10th public exam

இதுகுறித்த சர்ச்சை எழுந்ததும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருப்பதே இதுபோன்ற குழப்பத்திற்கு காரணம் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
one false question in SSLC social science public exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X