For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியில் உயிரிழந்த நெல்லை மாவட்ட தொழிலாளி.. உடலை கொண்டுவர முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்

ரியாத்தில் இறந்தவர் உடலை சொந்தஊருக்கு கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகிலுள்ள தெற்குமேடு அங்கன்காலடி நடுத்தெருவை சார்ந்தவர் அருள்ஜேம்ஸ். இவருக்கு திருமணமாகி திருமலைக்குமாரி என்ற மனைவியும், சுரேகா என்ற மகளும் உள்ளனர்.

சுமார் 5ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்காக இவர் சவுதிஅரேபியா சென்று அங்கு ரியாத் பகுதியிலுள்ள அகமத் சுலைமான் அல்பா என்ற கட்டுமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

Family of a Saudi employee wants his body to be hand over to them

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். தினமும் குடும்பத்தினரிடம் போனில் பேசிக்கொண்டுஇருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 19ம்தேதி, அருள் ஜேம்ஸ் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

Family of a Saudi employee wants his body to be hand over to them

இதனைத்தொடர்ந்து உறவினர்கள் கதறி அழுதுள்ளார். மேலும் இறந்தவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி கொண்டனர்.ஆனால் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் தகவல்களை கேட்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை என்றும் அவர்கள் தரப்பில் இருந்து உடலை மீட்க எந்த முயற்சியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.

ஆகவே தனது கணவர் உடலை மீட்டு சொந்தஊருக்கு கொண்டுவர தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் திருமலைக்குமாரி. அரசு நடவடிக்கை எடுக்குமா?

English summary
Family of a Saudi employee who hailed from Nellai district and died there, wants his body to be hand over to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X