For Daily Alerts
காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற குடும்பம்.. சீர்காழியில் பரபரப்பு
சீர்காழி: சீர்காழி காவல் நிலையம் எதிரே ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரை போலீஸ் ஏற்க மறுத்ததால் ரமேஷ் தீக்குளிக்க முயற்சி செய்து இருக்கிறார்.
சீர்காழியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மகன் காணாமல் போனதாக அங்கு இருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனால் இவர் கொடுத்த புகாரை போலீஸ் ஏற்க மறுத்துள்ளது.

இதற்கு சரியான காரணமும் சொல்லப்படவில்லை. இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் இன்று புகார் அளிக்க மீண்டும் சென்றுள்ளார்.
ஆனாலும் மீண்டும் போலீஸ் புகாரை எடுத்துக் கொள்ள மறுத்துள்ளது. இதனால் அவர் தான் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்று இருக்கிறார்.
அவர் மனைவி மற்றும் மகளுடன் எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரை மக்கள் காப்பாற்றினார்கள்.