For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லை பெரியாறு அவசியம் ஏன்?: இந்த ஒரு படம் போதும்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஒட்டிய வயிறுகளோடு, எக்ஸ்-ரே இல்லாமலே வெளியே தெரியும் எலும்புகளோடு தோற்றமளிக்கும் இம்மக்களின் போட்டோக்கள் பஞ்சத்தால் பழக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்டது இல்லையாம். முல்லை பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி வாட்ஸ்-அப்பில் ஒரு படம் சுற்றி வருகிறது.

Famine era of Tamilnadu before Mullai Periyar dam builds

அந்த படத்துடன் கூறப்பட்டுள்ள செய்தி இதுதான்:

இந்த படம் முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின்போது எடுக்கப்பட்டது. பஞ்சத்தின் காரணமாக மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் அனுப்பப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு மக்கள் அனுப்பப்பட்டனர்.இத்தகைய பஞ்சத்தால் மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல்தான் பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூடதன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.முல்லை பெரியார் அணையை காப்போம். கேரள சதியை முறியடிப்போம். இவ்வாறு சொல்கிறது அந்த செய்தி.

முல்லை பெரியாறு அணையின் அவசியத்தையும், பென்னி குயிக்கின் தியாகத்தையும் இந்த படம் நன்கு விளக்குகிறது.

English summary
A picture spread like viral in whatsapp group that shows the famine era of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X