For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருபுவனத்தில் டாஸ்மாக் முன்பு பயங்கரம்.. சரக்கு வாங்க வந்த பிரபல ரவுடி.. சரமாரியாக வெட்டி கொலை

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் டாஸ்மாக் மதுக்கடை அருகே நடுவக்கரை ரவுடி சரண்ராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில். திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    Tasmac இல்லைனா Tamilnadu-க்கு வருமானம் இல்ல - Mohan Kumaramangalam | Oneindia Tamil

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நடுவக்கரை வடக்கு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சரண்ராஜ் (வயது 30). இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    famus Rowdy killed in thirupuvanam near kombakonam

    திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு சரண்ராஜ் சென்றார். அங்கு மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றார். அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரண்ராஜை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    வந்தே பாரத் ரயில்... சீனாவுக்கு பலத்த அடி... டெண்டர் ரத்து செய்தது... மத்திய ரயில்வே!!வந்தே பாரத் ரயில்... சீனாவுக்கு பலத்த அடி... டெண்டர் ரத்து செய்தது... மத்திய ரயில்வே!!

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் சரண்ராஜ்ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    famus Rowdy killed in thirupuvanam near kombakonam

    காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் காங்கேயம் பேட்டையை சேர்ந்த சிலருக்கும் நடுவக்கரை சரண்ராஜ்க்கும் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இப்படுகொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுவக்கரை சரண்ராஜ் படுகொலைச் சம்பவம் திருவிடைமருதூர், திருபுவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Rowdy Saranraj was hacked to death by mysterious persons near the Tasmag liquor store in thirupuvanam next to Kumbakonam. In terms of whether he was killed due to prejudice? Thiruvidaimarudur police are investigating the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X