For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறைந்தார் மனோரமா... திரையுலகினர், தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Google Oneindia Tamil News

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-நடிகை மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

-மனோரமா தகனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன

-7 மணிக்கு முன்னதாக மனோரமாவின் உடல் தகனம் செய்யப்படலாம்

-2 மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட ஊர்வலம் மயானத்தை அடைந்தது

-இன்னும் சற்று நேரத்தில் மனோரமாவின் இறுதிச்சடங்குகள் தொடங்க இருக்கின்றன

-நடிகர் சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் மின் மயானத்தில் காத்திருக்கின்றனர்

-மனோரமாவின் உறவினர்களும் மின்மயானத்தில் மலர் வளையத்துடன் காத்திருக்கின்றனர்

-பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசாரும் மயானத்தில் குவிப்பு

-சாலைகளின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கூடிநின்று மனோரமாவிற்கு பிரியாவிடை

-ஊர்திக்கு முன்னும் பின்னும் சைரன் வைத்த வண்டியில் போலீசார் பாதுகாப்பு

-கட்டுக்கடங்காத கூட்டத்தால் மனோரமாவின் இறுதி ஊர்வலம் மெதுவாகவே செல்கிறது

-ஆர்கே சாலையைத் தாண்டியது மனோரமாவின் இறுதி ஊர்வலம்

-இன்னும் சற்றுநேரத்தில் மயானத்தை அடையவிருக்கிறது இறுதி ஊர்வலம்

-ஜெமினி மேம்பாலத்தை தாண்டியது மனோரமாவின் இறுதி ஊர்வலம்

-மேம்பாலங்களின் இருபுறமும் ஏராளமான மக்கள் நின்று மனோரமாவுக்கு பிரியாவிடை

-ஜெமினி மேம்பாலம் அருகே போக்குவரத்து நிறுத்தப்பட்டது

-மின்மயானத்தில் தனது உடலை எரியூட்ட விரும்பவில்லை மனோரமா - சரத்குமார் தகவல்

-மனோரமா தெரிவித்திருந்த விருப்பப்படியே சாஸ்திர, சம்பிரதாயத்துடன் இறுதிச் சடங்குகள் - சரத்

-மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் மனோரமாவின் இறுதி ஊர்வலம்

Fans pay rich tributes to Manorama

-அதிகரிக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது காவல்துறை

-வடிவேலு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் ஊர்தியில் செல்கிறார்கள்

-சென்னை தி.நகரில் இருந்து மனோரமாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

-மயிலாப்பூர் சுடுகாட்டில் மனோரமா உடல் தகனம் செய்யப்படுகிறது

-இறுதி ஊர்வலம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் மக்கள் வெள்ளம்

-மனோரமாவின் உடலுக்கு கண்ணீர் மல்க மக்கள் இறுதி அஞ்சலி

-மனோரமாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

-ஏராளமான திரைத்துறையினர், பொதுமக்கள் பங்கேற்பு

-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மனோரமாவுக்கு அஞ்சலி

-நடிகர் விவேக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்

-மனோரமா உடலுக்கு நடிகர் வடிவேலு நேரில் அஞ்சலி

-நடிப்புச் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மனோரமா - வடிவேலு

-மனோரமாவின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி

-தனுஷ் மனைவியுடன் வந்து மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி

-நடிகை மனோரமா உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி செலுத்தினார்

-ஏராளமான திரைப்படங்களில் நானும், மனோரமாவும் இணைந்து நடித்திருக்கிறோம் - ஜெயலலிதா

-நடிப்பில் மனோரமா ஒரு மேதைதான் - ஜெயலலிதா

-மனோரமா அவர்களைப் போல ஒரு சாதனையாளர் இனிமேல் பிறக்கப்போவதில்லை - ஜெயலலிதா

-மனோரமா மறைவு ஈடு செய்ய முடியாதது - ஜெயலலிதா

-அவரின் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் - ஜெயலலிதா

-மனோரமா உடலுக்கு சிவாஜி குடும்பத்தினர் நேரில் அஞ்சலி

-நடிகர் பிரபு, விக்ரம் பிரபு நேரில் சென்று மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

Fans pay rich tributes to Manorama

-நடிகை மனோரமாவுடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது - கோவை சரளா

-மனோரமாவின் தமிழ் உச்சரிப்பு இன்றைய திரையுலகில் காண முடியாது - கோவை சரளா

-நடிகை மனோரமா மறைவிற்கு தமிழக ஆளுநர் ரோசய்யா இரங்கல்

-மனோரமா உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி அஞ்சலி

-மனோரமா இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது

-தமிழக அரசு சார்பில் மனோரமா உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

-நடிகை மனோரமாவுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி

-நடிகர் அஜீத்தும் நேரில் இறுதி அஞ்சலி

-மனோரமாவின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி

-மனோரமாவின் குடும்பத்தாருக்கு விஜய் ஆறுதல்

-மனோரமா மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

Fans pay rich tributes to Manorama

-மனோரமாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு: ஜெயலலிதா

-யாரைப் பற்றியும் புறம்பேசாதவர் மனோரமா: வைரமுத்து

-என்னைப் பொறுத்த வரை ஒரு பாடகி மறைந்துவிட்டார்

-ஆச்சி நடித்த கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தது ஜில் ஜில் ரமாமணி தான்

-புறம்போசாதீர்கள் என்ற செய்தியை விட்டுச் சென்றுள்ளார் ஆச்சி: வைரமுத்து

-நன்றாக இருந்த மனோரமாவுக்கு நேற்று இரவு 11 மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது - பேரன் ராஜராஜன்

-மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நினைவை இழந்தார் - ராஜராஜன்

-மனோரமா உடலுக்கு அமைச்சர் வளர்மதி, செல்லூர் ராஜூ அஞ்சலி செலுத்தினர்

-ஜனாதிபதி மாளிகையில் மனோரமாவை பார்த்து ஆச்சி என அழைத்த அப்துல் கலாம்

-எப்படி ஆச்சி ஆயிரம் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாக கேட்ட அப்துல் கலாம்

-மனோரமா உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

-‘ஆச்சி'மனோரமாவின் இறப்பு திரையுலகிற்கு பேரிழப்பு: ஸ்டாலின்

-தமிழ் சினிமாவின் பெண் சிவாஜியாக திகழ்ந்தவர் மனோரமா: எஸ்.வி.சேகர்

-மனோரமாவின் புகழ் கடைசி வரை நிலைத்து நிற்கும்: டி.ஆர்

-உலகளவில் மனோரமாவைப் போல் சிறந்த நடிகை இல்லை: டி.ராஜேந்தர்

-மனோரமா உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி

-மனோரமாவின் ரசிகனாகவே இருந்து வருகிறேன்: டி.ராஜேந்தர்

-மறைந்த நகைச்சுவை அரசி மனோராமாவின் உடல் இன்று மாலை தகனம்

-மயிலாப்பூர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் - பேரன் தகவல்

-மனோரமாவின் உடலுக்கு நடிகர், நடிகையர், தலைவர்கள் இறுதி அஞ்சலி

-என் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா உருக்கம்

-இனிமேல் இப்படி ஒரு நடிகையைப் பார்க்கவே முடியாது - மனோபாலா

-என்னை வியக்க வைத்த மாபெரும் நடிகை மனோரமா - சுகன்யா நெகிழ்ச்சி

English summary
manorama death, manorama funerals, tributes manorama, மனோரமா, திரையுலகினர் அஞ்சலி, மனோரமா மரணம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X