For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அண்ணனுக்காக தீக்குளிப்பேன்.. முதல்ல மேலுக்குக் குளிங்கடா".. டிவிட்டரில் அஸ்வினை ஓட்டுராங்கப்பா!

Google Oneindia Tamil News

சென்னை: நானும் மதுரைக்காரண்தாண்டா என்று விஷால் ஒரு படத்தில் காட்டுக் கத்து கத்துவார்.. அதேபோல கேப்டன் சொன்னா செத்துப் போவேன் என்று அஸ்வின் சொன்னாலும் சொன்னார். அவரை வைத்து டி்விட்டரில் செம ஓட்டு ஓட்டி வருகின்றனர் நம்மவர்கள்.

டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் உள்ள சிலரிடம் நாம் சிக்கினால் அவ்வளவுதான், சட்னியாக்கி விடுவார்கள். யார், எவர் என்று பார்க்கவே மாட்டார்கள், பரிதாபமும் காட்ட மாட்டார்கள். இப்போது அஸ்வின் அவர்களிடம் சிக்கியுள்ளார்.

கேப்டன் உத்தரவிட்டால் மைதானத்திலேயே மடிவேன் என்று அவர் கூறியதை வைத்து டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். வாங்க அதை வேடிக்கை பார்ப்போம்.

முதல்ல குளிங்கடா

ஆழ்வார்க்கடியான் என்பவர் தனது டிவிட்டில், அண்ணுனுக்காக தீக்குளிப்பேன்.. முதல்ல மேலுக்குக் குளிங்கடா என்று கலாய்த்துள்ளார்.

அப்ப நாங்க யாரு

விக்னேஷ் என்பவர் போட்டுள்ள டிவிட்டில், அஸ்வின் - டோணி கூறினால் நான் மைதானத்திலேயே மடிவேன்.

இஷாந்த் - அப்ப நாங்க யாரு என்று வம்பிழுத்துள்ளார்.

அஸ்வின் விளக்கம்

அஸ்வின் விளக்கம்

இதற்கிடையே தனது பேச்சு குறித்து அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டில், நான் கூறிய கருத்து தவறாக திரித்து வெளியாகியுள்ளது. நான் சொல்ல வந்தது அடிபட்டுப் போயுள்ளது.

டோணியை மட்டுமல்ல

டோணியை மட்டுமல்ல

நான் சொல்ல வந்தது, எந்தக் கேப்டனாக இருந்தாலும் சரி, கேப்டனின் பேச்சுக்கு நான் கட்டுப்படுவேன். டோணி என்று இல்லை. எந்தக் கேப்டனாக இருந்தாலும், கேப்டனுக்குக் கட்டுப்படுவேன் என்றுதான் நான் கூறியிருந்தேன். அந்தக் கருத்தை அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

செத்துப் போவேன்னா.. அப்படியே எடுத்துக்குவதா

செத்துப் போவேன்னா.. அப்படியே எடுத்துக்குவதா

மைதானத்தில் மடிவேன் என்று சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. எந்தத் தனிப்பட்ட வீரருக்காகவும் இதைச் செய்வேன் என்று நான் கூறவில்லை. அப்படிக் கூறியதாக வெளியான தகவல் தேவையில்லாத திரிபு ஆகும் என்று கூறியுள்ளார் அஸ்வின்.

பேட்டி வந்ததுமே அஸ்வினிடம் விளக்கம் கேட்டு பேசியிருப்பார்கள் போல!

English summary
Indian offspinner R Ashwin has clarified his statement of ready "to die on the field" for captain MS Dhoni. He said his comments were misinterpreted and felt some of them were "blowing things way out of proportion". Meanwhile some fans are lashing Ashwin for his Dhoni comment in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X