For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடா அதிமுக வியாதி ரஜினி ரசிகர்களையும் தொத்திக்கிச்சே!

ஜெயலலிதா படத்தை வைத்து அதிமுகவினர் உலா வருவதைப் போல ரஜினி ரசிகர்களும் ஆரம்பித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா படத்தை வைத்து அதிமுகவினர் உலா வருவதைப் போல ரஜினி ரசிகர்களும் ஆரம்பித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடவுள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்களை சேர்க்க வெப்சைட் ஒன்றை தொடங்கினார் ரஜினிகாந்த். மேலும் கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் கொடியை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

ரசிகர்கள் பெயர் மாற்றம்

ரசிகர்கள் பெயர் மாற்றம்

மேலும் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அடுத்த அதிரடியாக தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ரஜினி மக்கள் மன்றம் என அதிரடியாக மாற்றினார் ரஜினிகாந்த்.

மக்களை சந்திக்கும் ரசிகர்கள்

மக்களை சந்திக்கும் ரசிகர்கள்

இதுவரை ஆன்லைனில் ஆள்பிடித்து வந்த நிலையில் தற்போது நேரடியாக மக்களை சந்தித்து உறுப்பினராக சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் ரஜினி ரசிகர்கள் மக்களை சந்திக்கும் சந்தித்து வருகின்றனர்.

போட்டோவை காட்டியபடி

போட்டோவை காட்டியபடி

ஜெயலலிதாவின் போட்டோவை கையில் வைத்தப்படி அதிமுகவினர் உலா வருவதை போல ரஜினியின் போட்டோவை கையில் வைத்தப்படியே மக்களிடம் தெருதெருவாக சென்று காட்டி ஆள் சேர்க்கும் பணியில் ரசிகர்கள் படுபிசியாக உள்ளனர். ரஜினியின் போட்டோவை காட்டியப்படி அவர்கள் மக்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெறுகின்றனர்.

நிர்வாகிகளை நியமிக்க

நிர்வாகிகளை நியமிக்க

பெண்கள், மூதாட்டிகள், இளைஞர்கள் என அனைவரும் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து தங்களை உறுப்பினர்களாக்கி கொள்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் வாக்குகளாய் மாறுமா என்பதே கேள்வி.

English summary
Rajini fans buzy with membership works. Fans show Rajini photo to the public and adding the members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X