For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் விவசாயி வங்கி கடன் தள்ளுபடி

திருப்பூரில் விவசாயி வெள்ளியங்கிரிநாதன் தற்கொலை செய்து கொண்டதால் அவர் வாங்கிய வாகன கடனை கோடாக் மஹிந்திரா வங்கி தள்ளுபடி செய்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் வெள்ளியங்கிரிநாதன் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டதால் அவர் வாங்கிய வாகன கடனை கோடாக் மஹிந்திரா வங்கி தள்ளுபடி செய்தது. ஜப்தி செய்த டிராக்டர் திருப்பி தரப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன், தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருந்தார்.

Farmer commits suicide near Tirupur

கடந்த வருடம் மழையின்மையாலும், வரலாறு காணாத வறட்சியாலும் பல இடங்களில் விவசாயம் பொய்த்து போனதால் இரண்டு மாத தவணையை அவரால் செலுத்த முடியவில்லை. வங்கிகளால் தொடர் மிரட்டலுக்கும், அவமானத்திற்கும் உள்ளான ஏழை விவசாயி வெள்ளயங்கிரிநாதன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி வெள்ளியங்கிரிநாதன், வாகனக் கடனை கோடக் மஹிந்திரா வங்கி இன்று தள்ளுபடி செய்ததுள்ளது. மேலும் அவரது டிராக்டரை திருப்பி தருவதாகவும் தெரிவித்துள்ளது. உயிர் போன பின்பு தள்ளுபடி செய்து என்ன லாபம் என திருப்பூர் விவசாயிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.,

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் வாழ்வதற்கே போராடும் நிலைமையில் பல தனியார் வங்கிகள் வாங்கிய திருப்பி செலுத்த வலியுறுத்தியன் பேரிலேயே இந்த விவசாயிகள் தற்கொலை நடந்தேறியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இருநூறூக்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர்பந்தரில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விவசாயகடனை தள்ளுபடி செய்யும் படி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் குரலைக் கேட்க, அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A farmer name Velliangiri allegedly committed suicide at Palladam near Tirupur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X