For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன்னால் வயிறு நிறைந்தவர்கள் நீ இறக்க கயிறல்லவா கொடுக்கிறார்கள்...!

Google Oneindia Tamil News

- வசந்தி, மதுரை

"இந்திய நாட்டின் இதயத் துடிப்பு இந்திய கிராமங்களில் கேட்கப்படுகிறது" என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்திய மக்கள் தொகையில் முக்கால் பங்கினர் கிராமங்களில் வாழ்கின்றனர். கிராம முன்னேற்றமே நமது நாட்டின் முன்னேற்றமாகும். ஆனால் இன்று என்ன நிலை உள்ளது?

இந்திய நாட்டின் கிரமங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை. கிராமத்தில் வசதிகள் குறைவு மற்றும் உயர் படிப்பிற்கு நகரத்திற்கே வர வேண்டிய சூழல். கிராமங்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையஙற்கள், போதிய மருந்துகள், தக்க மருத்துவர்கள் இல்லாத நிலை என பல குறைபாடுகள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

Farmers await for growth

உழவுத் தொழில் தவிர ஏனைய தொழில்கள் இல்லை. இருந்தாலும் லாபம் தருவதில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமையிலும் சிக்கித் தவிக்கின்றன கிராமங்கள்.

"பிறர் பசியைப் போக்க கடன் வாங்கி பயிரிட்டவனே.
உன்னால் வயிறு நிறைந்தவர்கள்
நீ இறக்க கயிறல்லவா கொடுக்கிறார்கள்"

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நம் நாட்டிலேயே உழைத்தால் அயல் நாடு செல்ல அவசியம் இருக்காது.

"அன்று நிலத்தில் பாய்ந்த நீர்
இன்று விழிகளில் பாய்கிறது"

அன்று பச்சை பசேலென்று ஆடை போர்த்திய பாரத நாட்டில், இன்று அவை கொஞ்ச கொஞ்சமாய் வெளுக்கும் அவலம். இது பெரும் சோதனை அல்லவா.

கிராமம் வளர்ச்சி அடைய அரசு திட்டங்கள் தீட்டினாலும் அந்தத் திட்டம் கிராமங்ளை சென்றடவைதில்லை. அரசு அதிக அளவில் கிராம மக்களை மதிப்பதில்லை. நகரங்களில் கோரிக்கையை நிறைவேற்ற போராட்டம் நடத்துவாரகள். கிராமங்களில் அப்படியெல்லாம் இருந்ததில்லை. ஆனால் இன்று கிராமங்களும் போர்க்களமாக ஆரம்பித்து விட்டன.

ஊருக்கெல்லாம் சோறிட்ட விவசாயம் பிளாஸ்டிக் அரசி உண்ணும் அவல நிலைக்கு ஆளாகி வுிட்டது. இந்த அவலமெல்லாம் ஏன். வானம் பார்த்து வாழ்ந்தவரை வருணனும் கை விட்டான். விவசாயிகள் மழை நீரை எதிர்நோக்கி வழிகளில் கண்ணீர் வழிந்தோட கை பிசைந்து காத்திருக்கிறார்கள்.

உணர்வுள்ள மனிதனாய் மீண்டும் நாமும் எழுந்திட வேண்டும். நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் சிற்றூர்கள், சிறப்பாக இருந்தால்தானே நாடு சிறந்ததாக விளங்க முடியும். அனைத்து நலன்களும் கிடைத்து கிராமத்தை முன்னேற்றம் அடையச் செய்து மகிழ்வோம்.

நெடுவாசல்கள் நமக்கு வேண்டாம்.. நெல்வாசல்களாக திகழட்டும் நமது கிராமங்கள்.

English summary
Not only Tamil Nadu but the whole Indian farmers are awaiting for the growh they needed for a long.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X