For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலங்குகள் அட்டகாசம்.. சிறுத்தை, செந்நாய் போல விவசாயிகள் வேடமணிந்து வந்து கோவை ஆட்சியரிடம் மனு

சிறுத்தை, செந்நாய் போன்று வேடமணிந்து வந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுத்தை, செந்நாய் போல விவசாயிகள் வேடமணிந்து வந்து கோவை ஆட்சியரிடம் மனு -வீடியோ

    கோவை: சிறுத்தை , செந்நாய் போன்ற விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வன விலங்குகளை போல வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தினர்.

    கோவை மாவட்டத்தை சுற்றி ஆனைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட வனத்தை ஒட்டிய பகுதிகள் உள்ளன. வனத்திலிருந்து காட்டு விலங்குகளான யானை, சிறுத்தை போன்றவைகள் அதிகமாக விவசாய பயிர்களை அழித்தும், ஆடு மாடுகளை கொன்றும், மற்றும் விவசாயிகளை தாக்கியும் பெரும் தொல்லையை ஏற்படுத்தி வருகின்றன.

    farmers petition to the coimbatore collector

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் இதனை கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை வைக்க முடிவு செய்தனர். அதனால் கோவை மாவட்ட இதுகுறித்து வலியுறுத்த சிறுத்தை , செந்நாய் போன்ற வன விலங்குகளின் வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

    வனத் துறையில் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், வன விலங்குகள் வரும்நேரத்தில் அவர்கள் வருவதற்கு வெகு நேரம் ஆவதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், வனத்துறையில் ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதற்கென தனிக்குழு அமைக்க வேண்டும் எனவும் அச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

    English summary
    The farmers petitioned the Coimbatore government to seek wild animals to prevent them from entering the town. They also requested to appoint people in the forest area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X