For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்பு, சோளம், எள்ளு பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த கோவை விவசாயிகள்

பயிர்களுடன் வந்து விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாரம்பரிய பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த கோவை விவசாயிகள்-வீடியோ

    கோவை: பாரம்பரிய பயிர் வகைகளான கம்பு, சோளம், எள்ளு உள்ளிட்ட பயறு வகைகள் அழிவை நோக்கி செல்வதாகவும், இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரியும், பயிர் வகைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நூதன முறையில் மனு அளித்தனர்.

    பாரம்பரிய பயிர்கள் வகைகளான கொண்டை கடலை, எள்ளு, கொள்ளு, மக்காசோளம், உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தற்போது பயிரிடுவது குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இந்த பாரம்பரிய பயிர்கள் அழிவை நோக்கி செல்வதாகவும் எனவே இதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    farmers petition to kovai district collector

    குறிப்பாக, மானாவாரி பயிர்களை பாதுகாக்க அரசு உதவ வேண்டும் எனவும், இந்த பயிர்களின் அழிவின் காரணமாக தற்போது மக்களிடம் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், எனவே இதன் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இந்த கிராமியப் பயிர்களை பாதுகாக்க வேண்டும் என கோரி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிறு வகைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நூதன முறையில் மனு அளித்தனர்.

    English summary
    Farmers Petition to Kovai district collector
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X