For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் தள்ளுபடி கோரி சென்னையில் திருவோடு ஏந்தி பிச்சையெடுத்த விவசாயிகள்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடை பெறவில்லை. வறட்சியால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது. இதனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகள் மீளமுடியாத நிலை உள்ளது என்பது விவசாயிகளின் கவலையாகும்.

Farmers protest in Chennai

, நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையால் சம்பா பயிரில் 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் இழப்பு ஏற்பட் டுள்ளது. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தினோம். இது தொடர்பாக சட்டசபைக் கூட் டத் தொடரில் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த விவசாயிகள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன், "விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வாங்கிய விவசாய பயிர் கடன்களையும், நகை கடன்களையும், மத்திய அரசும், மாநில அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Farmers protest in Chennai

காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி பங்கீடு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் பாரத பிரதமர் உத்திரவிட வேண்டும், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வீணாகிற மழை நீரை சேமித்து வைக்க 18786 பொதுத்துறை ஏரிகளையும் 20413 யூனியன் ஏரிகளையும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதலமைச்சர் உத்திரவிட வேண்டும், விவசாய மின் இணைப்புக்காக 100 சதவீதம் பணம் கட்டி காத்திருக்கும் விவசாயிகளுக்கும், 10 வருடங்களாக இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கும் இணைப்பு வழங்கிட வேண்டும், பிரதமர் புதிய பயிர்க்காப்பீடு வேளாண் திட்டம் அறிவித்திருப்பது ஏமாற்றம் என்று தெரிவித்தார்.

Farmers protest in Chennai

தனிநபர் பயிர்காப்பீட்டுதிட்டம் கொண்டுவரப்படவேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாயத்திற்கென தனிப்பட்ஜெட் போடவேண்டும், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயப்பயிற்களுக்கு மாநில அரசு முறையான நஷ்ட ஈடு வழங்க காலம் தாழ்த்துவதை தவிர்த்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நாங்கள் நடத்திவருகிறோம். எனவே மத்திய மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உலகத்திற்கே உணவளிக்கும் விவசாயிகள் கடனை ரத்து செய்யக்கோரி திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A group of farmers staged a protest in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X