For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் 'பந்த்' - ஆயிரக்கணக்கானோர் ரயில், சாலை மறியல்!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தமிழக விவசாயத்தை காப்பாற்றக் கோரியும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைதாகினர்.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை காவிரியில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் நெல்சாகுடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசியும் எந்த பலனும் இல்லை.

மத்திய மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது,. எனவே, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு பிராதன எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்தன.

சென்னை

சென்னை

எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய 3 இடங்களில் ரயில் மறியல் நடைபெற்றது. திருவாரூர், நீடாமங்கலத்தில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். திருவாரூர், மன்னார்குடி, குடவாசல், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், பேரளம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, மாவூர் ஆகிய 10 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

நாகை

நாகை

நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறையில் ரயில் மறியல் போராட்டமும், நாகை, சீர்காழி, கொள்ளிடம், வேதாரண்யம், தலைஞாயிறு, திருப்பூண்டி, வைத்தீஸ்வரன் கோவில், மாதான ஆகிய 8 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்துகள், ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை.

தஞ்சை ,பட்டுக்கோட்டை

தஞ்சை ,பட்டுக்கோட்டை

தஞ்சை ரயில் நிலையத்தில் வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர்.

பட்டுக்கோட்டையில் முழு கடையடைப்பில் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி...

தேனி...

விவசாயிகளுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையத்தில் விவசாயிகள், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் எல்லையில்...

சத்தியமங்கலம் எல்லையில்...

தலித் விடுதலை கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் தமிழக கர்நாடக எல்லையான சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியை கடந்து கர்நாடக மாநிலம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை...

மதுரை...

மதுரை ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம்

சிதம்பரம்

சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற திமுக, விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

English summary
Farmers associations protest calling on the state and Central governments to facilitate release of water from the Cauvery River for cultivation of Samba crops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X