For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது- ஜிகே.வாசன்

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக த.மா.க தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார். சில வரிச்சலுகைகளை ஆங்காங்கே கொடுத்துவிட்டு மொத்ததில் குழப்பமான, ஏமாற்றமான பட்ஜெட்யை மக்களுக்கு மத்திய அரசு கொடுத்துள

Google Oneindia Tamil News

சிவகங்கை:மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக த.மா.க தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற த.மா.க. தலைவர் ஜிகே.வாசன் மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது "கருப்பு பணம், கள்ளப்பணம் ஒழிப்பதற்காக மத்திய அரசு எடுத்த அவசர நடவடிக்கையால் நாட்டில் இயல்பு நிலை திரும்பவில்லை.

Federal budget was disappointing: TMC president G.K.Vasan

இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு பார்வையில் இருக்கும் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனிநபர் வருமானம் உயா்த்தபடாதது, சாதாரணமக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.

மனமுடைந்து நிற்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு விவசாய கடன் ரத்து செய்யும் என நம்பிய விவசாயிகளுக்கு மேலும் வருத்தமடைய கூடியவாறு மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளில் ஆக்கபூர்வமான திட்டங்கள் ஏதும் இல்லை.

இரயில்வே துறையில் தமிழக்திற்கு முக்கியதுவம் இல்லை. தாம்பரம், ராயபுரம் முனையம் தொடங்கவதற்கான அறிவிப்புகள் இல்லை. சில வரிச்சலுகைகளை ஆங்காங்கே கொடுத்துவிட்டு மொத்ததில் குழப்பமான, ஏமாற்றமான பட்ஜெட்யை மக்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

English summary
TMC president G.K.Vasan said the federal budget was disappointing. He accused that some tax allowances are there even thogh central government budget is disappointing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X