For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”நீங்க வந்தா மட்டும் போதும்.... ஃப்ரீயாவே தர்றோம்” – "ஈ" ஓட்டும் பொறியியல் கல்லூரிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் பொறியியல் கவுன்சிலிங் ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் இப்போதே தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கவலை ஆரம்பித்து விட்டதாம்.

வழக்கம் போல இந்த ஆண்டு எத்தனை காலியிடங்கள் வரப் போகிறதோ என்று.

இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையின் கீழ் 1 லட்சத்து 78 ஆயிரத்து 917 மாணவர் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வந்ததே கம்மிதான்:

வந்ததே கம்மிதான்:

இதை அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பும். ஆனால் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளதாம்.

திருப்பி ஒப்படைக்கப்பட்ட இடங்கள்:

திருப்பி ஒப்படைக்கப்பட்ட இடங்கள்:

எனவே அப்ளை செய்த அனைவருக்கும் கல்லூரி கிடைக்கும் என்பதில் பிரச்சினை இல்லை. நிர்வாக கோட்டாவில் ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டு 21,741 இடங்களை கல்லூரிகள் திருப்பி ஒப்படைத்துள்ளன.

மீண்டும் 5000 இடங்கள்:

மீண்டும் 5000 இடங்கள்:

இதுதவிர ஜூலை 1 ஆம் தேதிக்குள் மேலும் 5000 இடங்கள் அரசிடமே ஒப்படைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.

காசு இருந்தா கல்லூரி:

காசு இருந்தா கல்லூரி:

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் தாறுமாறாக அதிகரித்து விட்டன. கையில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் கல்லூரி உரிமையாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டு விட்டது. அதேசமயம் காலியாக இருக்கும் பி.இ இடங்களும் அதிகரித்து வருகின்றன.

காத்து வாங்கும் கல்லூரிகள்:

காத்து வாங்கும் கல்லூரிகள்:

கடந்த 2013-14ல் காலியாக இருந்த சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. கடந்த ஆண்டு 1.36 வட்சம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகள்:

முதல் தலைமுறை பட்டதாரிகள்:

முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் இந்த முறை 80,446 பேர்தான் அப்ளை செய்துள்ளனராம். இது கடந்த ஆண்டு 92,000 ஆக இருந்தது. இந்த 80,446 பேரில் மாணவர்கள்தான் அதிகம்.

மூடுவிழா பிராப்திரஸ்து:

மூடுவிழா பிராப்திரஸ்து:

அதாவது 52,197 பேர். மாணவிகள் 28,249 பேர் ஆவர். மொத்தத்தில் பல கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

English summary
Even before counselling for admission to engineering colleges under single window system begins this year, over 24,000 seats are up for grabs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X