For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியை உங்கள் வலையில் சிக்க வைப்பதா? போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சினிமா பைனான்சியருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினிக்கு எதிரான வழக்கு ,போத்ராவுக்கு அபராதம்- வீடியோ

    சென்னை: நீங்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக ரஜினியை சிக்க வைப்பதா என்று சினிமா பைனான்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    பைனான்சியர் போத்ரா என்பவர் கடந்த 2015-ல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தயாரிப்பளர் கஸ்தூரி ராஜா தன்னிடம் ரூ-65 லட்சம் கடனாக வாங்கியதாகவும், ஆனால் அந்த பணத்தை தனக்கு திருப்பி தருவதற்காக அவரது சம்பந்தியும் சூபபர் ஸ்டாருமான நடிகர் ரஜினியும் உத்தரவாதம் அளித்தார் என்றும் சொல்லியிருந்தார்.

    Film financier Bothra is fined by the High Court

    இதற்கு ரஜினிகாந்த் தரப்பிலும் பதில் மனு செய்யப்பட, இந்த வழக்கு பல நாட்கள் நடைபெற்று வந்தது. பின்னர் இறுதியாக இதுகுறித்து நீதிபதி என்.சதீஷ்குமார் தீர்ப்பு அளித்துள்ளார். அந்த தீர்ப்பில், "இந்த வழக்கு தொடரப்பட்டதே சட்டத்தை தனக்கு சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்தியும்தான். எனவே ஒருவரின் பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க என்றும் உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

    சமுதாயத்தில் நல்ல அந்தஸ்திலும், பிரபலமாகவும் உள்ள ரஜினிகாந்த்தை வலையில் சிக்க வைப்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி பிரபலமானவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் ஊடகங்களும் பரபரப்பாகத்தான் செய்திகளை வெளியிடும். இதுபோலத்தான் மனுதாரரும் விளம்பரத்திற்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

    உள்நோக்கத்துடன் தொடரப்படும் இதுபோன்ற வழக்கையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டார். அத்துடன், சட்டத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்காக தயாரிப்பாளர் போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

    English summary
    Film financier Bothra is fined by the High Court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X