For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் அஞ்சலிக்குப் பின் நீட் காவு கொண்ட அனிதாவின் உடல் தகனம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

நீட்டால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் தகனம் செய்யப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவார் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார்.

Final rites will be done for Anitha by this evening

இந்நிலையில் அவரது உடல் வீட்டருகே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி விட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரியலூரை அடுத்த குழுமூருக்கு 10 மணிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

அனிதாவின் இறுதி ஊர்வலத்தின் போது பலரும் மாலைகளை போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அனிதாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய ஏழை மாணவி அனிதாவின் உடலை தீ தீண்டியதைப் பார்த்து கிராமமே சோகத்தில் மூழ்கியது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

English summary
Final rites will be performed for Anitha today who hanged herself for not getting Medical seat though she scored high marks in Plus 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X