For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு... எதுக்கு தெரியுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பேருந்துகளின் கட்டணம் கடந்த சனிக்கிழமை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினரும் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

FIR filed against VCK leader Thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை பாரிமுனையில் நேற்று அரசு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றது, அனுமதியின்றி அதிக அளவில் ஆட்களை ஆட்டோக்களை ஏற்றிச் சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவசியமற்ற போராட்டங்களுக்கு அனுமதியளிக்கும் அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை அழைத்து சென்றதற்காக திருமாவளவன் மீது வழக்கு பதிந்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அரசின் அடக்குமுறை கொள்ளை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

English summary
FIR filed agianst VCK leader Thirumavalavan for conducting rally yesterday which creates disturbance to people, VCK protested against bus fare hike at Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X