For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் குபு குபு தீ... தீயணைப்பு பணியில் வீரர்கள்

கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குபு குபுவென பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் எண்ணெய் கேன்கள், பெயின்ட் தயாரிக்க பயன்படுத்தும் ரசாயனங்களும் இருப்பதாக தெரிகிறது. இதனால் தீ கட்டுக்கு அடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது.

Fire caught at godown near Gummidipoondi, fire fighters are in rescue operations

கும்மிடிப்பூண்டி, சிப்காட் பகுதியில் இருந்து முதலில் தீயணைப்பு வாகனங்களை வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் எண்ணெய் கேன்களும் உள்ளதால் தீ மள மளவென எரிந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. 2 தீயணைப்பு வாகனங்கள் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பொன்னேரி, திருவள்ளூரில் இருந்து மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Fire caught at godown near Gummidipoondi, fire fighters and 4 fire engines rushed to the spot to settle down the fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X